STORYMIRROR

Latha S

Inspirational

4  

Latha S

Inspirational

நிலம்

நிலம்

1 min
284

பூமியின் பாரம் தாங்குவது

நிலம்

பூமாதேவியின் பொறுமைதான்

பலம் !


தன்னை தோண்டும் மனிதனுக்கும்

தண்ணீர் தருவாள் பூமித்தாய்!


நிலத்தை நேசித்து

மண்ணுக்குள் ஆழமாக ஊன்றி நிற்கும் மரம்

தன்னைத் துண்டிப்பவனுக்கும்

மறுக்காமல் நிழல் கொடுக்கும் மண்ணில்

விழும் வரை!


களத்துமேட்டை கண்காணாமல் தொலைத்து

கல் மரங்களாய் கட்டிடங்களைக் கட்டுவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு

இணையானதன்றோ!


நிலையில்லா மனிதர்களின் வேட்கைகண்டு

நிலமகள் குலுங்கி அழும் வேளை

நிகழும் அதிர்வுதான் நிலநடுக்கமோ?


சுமக்கும் பாரம் அதிகமாகும் போது

சுமைதாங்கவொண்ணா தருணத்தின் போது

சுரீரென்னும் நிலமகளின் கோபம்தான்

சுக்குநூறாக வெடிக்கும் பூகம்பமோ?


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational