சுதந்திரம் கேட்கும் சுதந்திரம்
சுதந்திரம் கேட்கும் சுதந்திரம்
1 min
384
சுதந்திரம் கேட்கும் சுதந்திரம்
----------------------------------------------
மாண்புமிகு
மன்னர்களே
எங்கள்
கனவு
கட்டிடங்களுக்கு
அஸ்திவாரம்
அமைக்க
அரியணையில்
அமர்த்தினோம் - ஆனால்
உங்கள்
அரசியல் வியாபாரம்
எங்கள்
கல்லறை மீது
கொடிகட்டிப்பறக்கிறது
கோபுரங்களை
எதிர்பார்த்து
ஏமாந்தோம்
இப்பொழுது
குப்பைமேட்டில்
குடியிருக்க
கற்றுக்கொண்டோம்
உங்கள்
புன்னகைக்கு பின்னால்
புதிர்களும்
கைஅசைவிற்கு பின்னால்
களங்கமும் இருப்பதை
அறியாமல் போனோம்
உங்கள்
கறை படிந்த
கைகளால்
எம் சுதந்திரத்தை
குறை படிந்ததாக்காதீர்
இல்லங்கில்
சுதந்திரம் வேண்டி
சுதந்திரமே போராடும் ......