என் பயணம்
என் பயணம்
நான்
பயணப்பட்டு கொண்டிருக்கிறேன்
இந்த
படகு
என்னுடையதல்ல
துடுப்புகள்
என்னுடையதல்ல
நீர்
என்னுடையதல்ல
நீல வானமும்
என்னுடையதல்ல - ஆனால்
எல்லாம்
எனது
என்ற
எண்ணம் மட்டும்
என்னுடையதாக ..
படகில் என்னுடன்
பயணித்தோர்
பலர்
உற்றாராய்
உறவினராய்
நண்பர்களாய் -இருந்தாலும்
நான்
தனியாகத்தான்
பயணப்பட்டு கொண்டிருக்கிறேன்
நான்
கரையேறும் இடம்
பாளையா சோலையா
தெரியாது
இருளா
பகலா
தெரியாது
என்
நிழல் கூட
அங்கெனை
தொடருமா
தெரியாது
எனினும்
இந்த
பயணத்தின்
முடிவில்
நானும்
கரையேற வேண்டும்
நான்
மட்டும்
தனியாக ........