கண்ணே நான் விண்ணப்பிக்கிறேன்
கண்ணே நான் விண்ணப்பிக்கிறேன்

1 min

321
கண்ணே நான்
விண்ணப்பிக்கிறேன்
உன்
மைவிழிச்சிறையினுள்
மனம் வாடும் கைதியாய் நான்
விண்ணப்பிக்கிறேன்
உன்
காலடிச்சுவடுகளை
கோலமிட்டுக்கொண்டாடும்
கோவில் பூசாரியாய் நான்
விண்ணப்பிக்கிறேன்
விளைச்சல் எதுவாகினும்
விதை விதைத்து
வேர்வை சிந்தும்
விவசாயியாய் நான்
விண்ணப்பிக்கிறேன்
தோற்போம் எனத்தெரிந்தும்
தொகுதிகளில் போட்டியிட்டு
தொகை இழக்கும்
வேட்ப்பாளனாய் நான்
விண்ணப்பிக்கிறேன்
மடையா
மறுக்கப்டும்
எனத்தெரிந்தும்
ஏன் விண்ணப்பிக்கிறாய்
என்கிறாயா ???
நிராகரிக்கும் பொழுதாவது
நினைத்துப்பார்ப்பாய் என்ற
நிம்மதியுடன்
விண்ணப்பிக்கிறேன் !!!!