ஆலய மணிகள் ...
ஆலய மணிகள் ...
-----------------------------------
இங்கே
குப்பைகளை
கொட்டாதீர்
ஆலயத்தின் உள்
எழுதி வைத்தான்
ஆண்டவன்
அள்ளமுடியாமல் ..
------------------------------------
கேட்பதால்
வெளியே நாம்
கொடுப்பதால்
உள்ளே அவன்
கொடுக்கத்தெரிந்தால்
நாமும் கடவுள்தான்
------------------------------------
அம்பாளுக்கு
அட்டிகை சாத்தி
அழகு பார்த்தேன்
அம்மாவை
அனாதை
இல்லத்தில் விட்டு .....
------------------------------------
மழை வேண்டி
யாகம்
யாக குழியில்
வெந்த
மரங்கள்....
------------------------------------
ஆடம்பர
ஆடையில்
அறங்காவலர்
கோவில்
கும்பாபிஷேகத்தில் ..
கட்டிய
கொத்தன்
சுண்ணாம்பு கரை
உடம்போடு
அண்ணாந்து பார்த்தான்
------------------------------------
சிறப்பு தரிசனம்
சீக்கிரம்
கண்டேன்
கடவுளை
கடவுளோ
வரிசையில் நின்ற
ஏழை பக்தனை தரிசிக்க
ஏக்கத்தோடு
கருவறை உள்ளே ....
------------------------------------