ஒரு குடம் தண்ணீர் கேட்கிறது
ஒரு குடம் தண்ணீர் கேட்கிறது
ஒரு குடம் தண்ணீர் கேட்கிறது
கோடை வெயிலில்
குடங்களின் மாநாடு
கோட்டையை பிடிக்க அல்ல
குடிநீர் பிடிக்க
இவை அனைத்தும்
நாவறண்டு போன
நகரத்துக்குடங்கள்
தண்ணீர் வாகனத்தின்
தரிசனத்துக்கு
தவம் கிடக்கும்
தற்கால அர்ச்சுனர்கள்
தண்ணீருக்கு நடக்கும்
தரும யுத்தத்தில்
இவை பெற்ற
தழும்புகள் ஏராளம்
தண்ணீர் சந்தையில் இவற்றுக்கு
தனியான மதிப்புதான் - ஏனெனில்
குடங்களை கொண்டே
குடிநீரின் விலை
குறிக்கப்படுகிறது
p>இக்குடங்கள்
காவிரியை
கை கழுவி விட்டு
கங்கையின்
வரவிற்கு
கால்கடுத்து
காத்து கிடக்கிறது
இவை
விளை நிலங்களை
விளையா நிலங்களாக்கி
நெட்டை மரங்களை
மொட்டை மரங்களாக்கி
இயற்கையை பணமாக்கி
இரும்பு பெட்டியிலிட்டு
தண்ணீர் தேடி
தவியாய்
தவிக்கிறது
குடங்களே
இனியேனும்
இயற்கையோடு
இணைந்து செல்லுங்கள்
இல்லையேல்
நாவறண்டு
நைந்து போவீர்கள்
எச்சரிக்கை .........