அரசியல் "வியாதிகள்...."
அரசியல் "வியாதிகள்...."
------------------------------------------
குலத்தொழில் முறை ஒழிக !!!
குரல் கொடுத்த தலைவர்
அன்பு மகனை
அமைச்சராக்கி
அழகு பார்த்தார்
மக்கள்
தலைவர்களை
உருவாக்கும்
காலம் போய் - இன்று
தன் மக்களையே
தலைவனாக
உருவாக்கும்
முயற்ச்சியில் ..
------------------------------------------
அரசியல்வாதிகள்
எங்களுடன் பேச மாட்டார்கள்
அதிகாரிகள்
எங்களை பேச விடமாட்டார்கள்
------------------------------------------
மகிழுந்தில்
மன்னர் போல்
கொடி கட்டிப்பறக்கும்
கோமான்களே
அந்த கொடி
பறைசாற்றுவது உங்கள்
கொள்கையையா ????
கொள்ளையையா ???
------------------------------------------
ஜனநாயகத்தை
நம்புவோம்
ஏனென்றால்
அடக்குமுறையில்
அன்றாடம்
இடப்படும்
முட்டாள் முத்திரை இங்கு<
/p>
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறைதான் இடப்படும்
------------------------------------------
எழுச்சி மாநாடு !!!
கூட்டம் காட்ட
கூட்டிவரப்பட்ட
குடிமகன்
எழுந்திருக்க முடியாமல்
எச்சில் இலையோடு..
------------------------------------------
வெந்த கட்டைகள்
வேள்வியில்
சமைத்த
சுதந்திரம்
சொந்த
சட்டைப்பையில்
சுவிஸ் வங்கி
கணக்குகளாய்
------------------------------------------
கூவத்தில் ஒரு
கூட்டு ஆராய்ச்சி
எங்கே
ஜனநாயகம் ???
------------------------------------------
வெள்ளை
சட்டைக்குள்
கொள்ளை பணம்
பாவம்
இந்தியர்கள்
------------------------------------------
உதடுகளின் அசைவில்
உள்ளம்தனை தோற்றவன்
ஏழை வாக்காளன்
------------------------------------------