கருப்பதிகாரம்
கருப்பதிகாரம்
கருவில் இருந்த போதே
கல்லறையில் சிலையாக்கப்பட்டவள்
வேண்டும் என்று
பூவுலகில் மலர்கின்ற போது
கள்ளிக்காட்டில் மொட்டாய் உதிர்ந்தவள் அவள்
வளர்ந்து வருகையில்
இரும்பு அணிகளனை
காலில் அணிந்து அழகு பார்த்தவள் அவள்
பள்ளிப் பருவத்தில் பயத்தோடு பாதை அமைத்த பவளப்பெண் அவள்
கல்லூரி காலத்தில் கலக்கத்தோடு கற்பு காத்தவள் அவள்
திருமண திருப்பத்தில் திடுக்கிட்டு திரிந்தவள் அவள்
வேலைக்கு வேண்டாம்
வீட்டுக்கு வேண்டும்
களிப்பார வேண்டாம்
கற்ப்பாற்ற வேண்டும்
அவளுக்கானது வேண்டாம்
அவள் வேண்டும்
இத்தனை வேண்டாம்
எத்தனை வேண்டும்?
அத்தனையும் வேண்டும் என்றவள்
இன்று சித்திரமாய் சிரிக்கிறாள்
சுவற்றில் பூமாலை ஏந்தி