என் ஆசிரியர்
என் ஆசிரியர்
தோள் கொடுக்கும் தோழியாக
தோள் தட்டும் ஆசானாக
தோள் மீது வைத்து கொண்டாடும் தேவதையாக
என் ஆசிரியர்...
கடின சொல் உரைத்தாய்
எங்கள் வாழ்வு எதிலும் கசியாமல் இருக்க
விளக்கு ஒன்று ஏற்றினாய்
எம் வாழ்கை அனையாமல் இருக்க
சொல்லிக்கொண்டே போகலாம் நீங்கள் விதைத்த நற்கணியை
எங்கோ பிறந்தோம்
உங்களது வயிற்றில் வளர்ந்தோம்
எட்டு வைத்தோம்
உன் காலடி மண்ணை சேமித்துக் கொண்டோம்
வைரம் வேண்டாம்
வைடூரியம் வேண்டாம்
நீங்கள் என்னுள் கண்டெடுத்த இந்த அறிவு போதும்
இந்த காலத்தின் கதிரில் விளைந்து முதிர்ந்திட....