அவளின் செந்நிறம்
அவளின் செந்நிறம்
சிவந்த கண்கள்,
சிவந்த கன்னங்கள்...
சிரித்து வந்த சிற்பமா?
சிதறலில் சித்திரமான நிறமா?
உதட்டோர சாயம் கசிகையில்
குருதி வந்து அதை முத்தமிடுமோ?
உடைந்த கனவுகள்
அவள் கையில் மருதாணியாகுமா?
வெண்ணிற ஆடையின் பின்
சிவந்த பொட்டின் அலங்காரம்
அன்றோடு இரவானது
அவளின் செந்நிற வானம் .