STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Romance

5  

Vadamalaisamy Lokanathan

Romance

ஒரு முறை

ஒரு முறை

2 mins
461

ஒரு முறை பார்த்தேன்

இரு முறை பார்த்தேன்

மீண்டும் மீண்டும் பார்த்தேன்

உன்னிடம் எந்த மாற்றமும் இல்லை

உன் அன்பில் தொய்வு என்பதே இல்லை இது மட்டும் எப்படி உன்னால் முடிகிறது…


அடிக்கடி நான் மறப்பது உன்னிடம் அன்பை காட்ட

அன்பை ஒவ்வொரு முறையும் சொல்லி விளக்க நீ ஒன்றும் முட்டாள் அல்ல  என்று என்னுடைய இறுமாப்பில்   மறந்து போகிறேன்….


நீ முட்டாள் இல்லை தானே

ஆனால் என் மீது நீ வைக்கும் அன்பு

முட்டாள்தனமாக இருக்கிறதே

பல முறை யோசித்தேன் உன் அன்புக்கு நான் பொருத்தமானவன்

தானா,பல முறை என்னை நானே கேட்டுக்கொண்டது உண்டு….


உன்னை கோபித்து கொண்ட நாட்கள் அதிகம்,அருகில் வந்த

உன்னை தட்டி விட்ட காலங்கள்

என்னுடைய முரட்டு தனம்,என் சுயநலம் அத்தனையும் உனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது எப்படி…


இன்னும் என் முகத்தை பார்த்தால் உன் முகத்தில் புன்முறுவல்

அது என்ன கேலியை குறிக்கிறதா

இல்லை உன் ஆணவத்தை பிரதிபலிக்கிறதா..

உன்னை அடிமை படுத்த நான் கொண்ட முயற்சிகள் அத்தனையும் தோல்வி தான்..


உன்னை வெல்லும் ரகசியம் எனக்கு தெரியாமல் போனது ஏன்..

உன் அன்பிற்கு முன்னால் நான் சாம்பல் ஆகி போவது ஏன்…..


இது எனக்கு மட்டும் தானா..

எல்லா பெண்களும் உன்னை போல இருந்தால் ஆண் சமூகத்தின் நிலை தான் என்ன..


போதும் உன் அன்பிற்கு ஒரு அணை கட்டு, அணையை கட்ட என்னை கொத்தனார் ஆக்கி விடாதே….


உன் அன்பால் தான் உயிர் வாழ்கிறேன் இப்போது புரிந்தது…


உன் அன்பு வற்ற கூடாது..அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..


பதிலுக்கு காத்து இருக்கும் உன்னவன்….



Rate this content
Log in

Similar tamil poem from Romance