காதல் பொறாமை
காதல் பொறாமை
உனது ஆடைகளை பார்த்து பொறாமை தான் எனக்கு நான் தீண்ட வேண்டிய என்னவளை நித்தம் நித்தம் அது தீண்டிக்கொண்டிருப்பதால்!
உனது கண்ணாடியை பார்த்து கூட பொறாமை நான் இரசிக்க வேண்டிய என்னவளை அது நித்தம் நித்தம் இரசித்து கொண்டே இருப்பதால்!
உனது குளியலறை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் பார்க்க வேண்டிய என்னவளின் அழகை அது பார்த்து கொண்டிருப்பதால்!
உனது ப்ரஷினை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் தேய்க்க வேண்டிய முத்துக்களை அது தேய்த்து கொண்டிருப்பதால்!
உனது கண் மையை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் தீண்டவேண்டிய என்னவள் இமையை அது தீண்டிக்கொண்டிருப்பதால் !
உனது உதட்டு சாயத்தின் மீது கூட பொறாமை தான் எனக்கு என்னிதழ் சுவைக்க வேண்டிய என்னவள் இதழை அது சுவைத்து கொண்டிருப்பத
ால்!
உனது பொட்டினை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் தீண்ட வேண்டிய நெற்றியினை அது தீண்டிக்கொண்டிருப்பதால்!
உனது ஜிமிக்கிகம்மல் பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் தொட வேண்டிய செவிகளை அது தீண்டிக்கொண்டிருப்பதால்!
மூக்குத்தி மீது கூட பொறாமை தான் எனக்கு நான் முத்தமிட வந்த போது முன்டியத்து என்னை அது தடுப்பதால்!
உனது நகையை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் பற்ற வேண்டிய பளிங்கு கழுத்தை அது பட்டு கொண்டிருப்பதால்!
உனது போர்வையின் மீது கூட பொறாமை தான் எனக்கு
நான் போர்த்த வேண்டிய என்னவளை அது போர்த்திக்கொண்டு இருப்பதால்!
நீ பயன் படுத்தும் அத்தனை மீதும் பொறாமை தான் எனக்கு