காதல்
காதல்
எதற்காகப் பிறந்தேன்
என்று தெரியவில்லை/
அன்பு செலுத்த மறக்கும்
உனக்கு அன்பு செலுத்தவா?
நம்பிக்கையில்லாத
உன்
வாழ்வில்
நம்பிக்கை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டவா?
யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை/
கல்மனம் கொண்ட உனக்காக
கண்ணீர் வடிக்கவா?
என்
எதிர்காலத்திற்காக
கடவுளை வணங்கியதில்லை/
உன்
எதிர்காலம் நன்றாக அமைய கடவுளை வணங்கவா?
இது
என்
காதலின் ஆரம்பமா?
இல்லை
என்
அன்பின் இறுதியா?
🌿 ☘️ 🌿 ☘️ 🌿
உங்களின்
தினேஷ் கண்ணா

