அத்தை மகள்
அத்தை மகள்
அத்தை மகள் ரத்தினமே அழகான அருமருந்தே!
ஆருயிர் பெட்டகமே அறிவான பொக்கிஷமே!
இம்சிக்கும் அன்பாலே துரத்தி வரும் பேரழகே!
ஈகையில் உவகை கொள்ளும் காரிகையே!
உணக்கம் ஏற்பட்டு நான் அமரும்போதும்
உற்சாகமூட்டும் பொன்மகளே!
ஊடல் தான் ஏற்படினும் ஊடலிலும் எம்மை விட்டு கொடுக்காத உண்மையானவளே!
எதிர்பாரா நேரத்திலே இச் கொடுப்பவளே!
ஏடணை கொண்டு நான் ஏங்குகையிலும்
அருகிலமர்ந்து சேட்டைகள் செய்பவளே!
ஐயனை நான் நினைக்கையிலும் அருகிலமரும் அற்புதமே!
ஒதுங்கி நான் நிற்கையிலும் ஒய்யராமாய் என்னருகில் வந்து நிற்பவளே!
ஓவியமாய் எம்மனதில் நிறைந்திருப்பவளே!
ஔவியம் இல்லா ஒப்பற்ற திருமகளே!
அத்தை மகள் ரத்தினமே!

