போர் வீரன்
போர் வீரன்
எதிரிகளாய் நம் ஏழைத்தாயின் மகன்(ள்)கள்!
இனிக்க இனிக்க பேசுவார்கள்
சர்க்கரை நோயே வந்து விடும்
அவ்வளவு இனிப்பாக பேசுவார்கள்!
இளித்து இளித்து பேசுவார்கள்
இனிமையாக பேசுவார்கள்!
வேப்பம்பூ ரசத்தை கூட இனிக்குது என்பார்கள்
வெம்பாடு பட்டு வேட்பாளராக நிற்கிறோம் என்பார்கள்
ஆடி காரில் வந்து விட்டு
காலில் மாய்ந்து மாய்ந்து விழுவார்கள்!
நாங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகள்!
நீங்கள் தான் வாக்களித்து
எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முதலை கண்ணீர் வடிப்பார்கள்!
மக்களே எச்சரிக்கை
இன்று ஓட்டுக்கு காலில் விழுந்தவர்கள் நாளை டோயட்டா காரில்
நம் முகத்தில் காரி முழிந்து விட்டு செல்வார்கள்!
உங்களுக்கு காலணியாக இருப்பேன் என்றவர்கள்
உங்களை கண்டும் காணாமல் போவார்கள்!
மக்களே எச்சரிக்கை
இன்று நீங்கள் வாங்கும் பணம்
நாளை நம்மை பிணமாக கூட மதிக்க மாட்டார்கள் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்!
நமது ஓட்டு நமது ஆட்காட்டி விரலில் தான் உள்ளது
சரியான ஆட்களை தேர்வு செய்து
நமக்கான போர்வீரர்களாக அனுப்பி வைப்போம்!
மறவாதீர் ஏப்ரல் 19 பாராளுமன்ற தேர்தல்
நிச்சயம் வாக்களியுங்கள்
நல்ல போர் வீரர்களை தேர்வு செய்வீர்!
உங்களின்
தினேஷ்
