வயோதிகம்
வயோதிகம்
புத்திசாலி ஆக
வயதாக வேண்டியதில்லை
அனுபவசாலியாக ஆகியிருந்தாலே
போதுமானது
வயதானவன் இளமையில்
இறந்திருப்பானேயானால்
மூப்பில் இரக்க நேரிடும்
நரைத்த மேகம் மழை தருவதில்லை
கருத்த மேகமே பொழிகிறது
மூப்பின் இதழில் தவளும் இளமை
இழந்த அனைத்தையும் அசைபோடும் முதுமை
முதுமை
புயலின் நடுவே சிக்கிய கப்பலைப் போல
கரை ஏறவும் முடியாமல்
கடலில் மூழ்கவும் முடியாமல்
தவிக்கும் அப்போது உதவும்
இளமையின் அனுபவம்
இளமைக்கு தெரியும்
முதுமையின் பரிகாசம்
முதுமைக்கென்னவோ
தானே மூத்தவன் என்ற கர்வம்
முதுமையே கேட்டுக்கொள்
இளமையிடம் கற்ற பாடமே நீ
கண் அயர்ந்து தூங்கு
அணைந்த முதுமையே
மீண்டும் இளமை உன்னை அணைக்கும்.
