மண்ணுக்கு ஒரு சவால்
மண்ணுக்கு ஒரு சவால்


பச்சை மண்ணில்
சிகப்பு கொடி
காட்ட ஒரு வைரஸ்
உலா வருது
இலவசமாய் பயணம்
அறிமுகமே இல்லாமல்
அனைவரும் அலறும் படி
அச்சுறுத்தி அமைதியை
அறவே அழித்து
அயராமல் தொடர்கிறது
தொட்டவர் மரணம் தான்
மருந்து ஏதும் இது வரை இல்லை ....
பாவம் மனிதனோ .....
தப்பிக்க முடியாமல்
தற்காத்து கொள்ள
சமூக விலகலும்
முகக்கவசம்
கைக்கவசம்
அணிந்து மேலும்
தனிமை படுத்தி
பாதுகாப்புடன்
பத்திரமாகவும்
இருப்பதாய் தன்னையே
ஏமாற்றிக்கொண்டு.......
எல்லா நாடுகளிலும்
எல்லா மக்களையும்
எல்லா வயதினதவரும்
இந்த நோய் கிருமி
ஒரு சிட்டிகையிட்டு
விசில் அடித்து சொன்னது
நான் ஒரு சவால் - இந்த
மண்ணுக்கே ஒரு சவாலாக .......!!!