உன் புகை..... உனை புதைக்கும்.....
உன் புகை..... உனை புதைக்கும்.....


மனிதா நீ புகையை
முத்தமிட நினைக்கிறாய்
மண் உன்னை கட்டி
முத்தமிட நினைக்கிறது ............!!!
மனிதா நீ என்னை
தொட்டு சீரழிக்கிறாய்
நான் உன்னில்
என்றும் புற்றுநோயாய்................!!!
கவலையை மறக்க
கனவுகளை கலைக்க
கடையோராம் ஒரு தீர்வு ...............!!!
அழுத்தத்தை நீக்க
பதற்றத்தை அழிக்க
சந்தையோராம் ஒரு தீர்வு ...............!!!
புண் பட்ட மனசு - அதை
புகை போட்டு ஆத்து
புகை படிஞ்ச உசுரு - இதை
பூமியை விட்டே அனுப்பு ...........!!!
புகையை நேசிக்காதே
புகையாய் போய்விடுவாய்
புகையை போட்டால்
புதைந்து போவாய் ...........!!!
விலை கொடுத்து வாங்கு - பின்னர்
விலையாய் கொடுப்பது உன் உயிர் ...!!!