பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி


பறக்கும் பூச்சி
வண்ணத்து பூச்சி
பட்டாம் பூச்சி
பூச்சி என்றால் .....
இயல்பாய் ஒரு பயம்
சாதாரணமாய் ஒரு வெறுப்பு
வழக்கமாய் அது அசிங்கமானது
சகஜமாய் அது கோரமானது
இது
நிற பூச்சி
எல்லாரும்
விரும்பும் பூச்சி
இது
குழந்தைகள் விளையாடும் பூச்சி
காதலர்கள் மனதில் ஓடும் பூச்சி
கவிஞர்கள் எழுதநினைக்கும் பூச்சி
முதியவர்கள் விரும்பும் பூச்சி
ஏய் பூச்சியே .....
உன்னை அனைவரும் ரசிக்க&nb
sp;
காரணம் என்ன ?
அருவிகளிடையே
செடி, கொடிகளிடையே
பூக்களிடையே - நீ
பூத்து குலுங்குவதாலா - இல்லை
வயது விகிதம் பார்க்காமல்
வண்ணம் நிறைந்து காணப்படுவதாலா
உன் வண்ணங்கள்
அழகு புறாக்களையே வெற்றிகொண்டதாலா
அல்லது நிலவு ஒளியை மங்க செய்ததாலா
ஏய் பூச்சியே .....
உன் வகைகள் பலருக்கு ஒரு விருந்து ....
உன் நிறங்கள் பலருக்கு ஒரு மனஅமைதி .....
உனை பார்த்த பின் - நீ
பறப்பது போல் பலரது கவலைகள் பறக்கும் .....
பலருக்கு பிறக்கும் புது உற்சாகம் ....