STORYMIRROR

தினேஷ் கண்ணா

Children

3  

தினேஷ் கண்ணா

Children

பால்யகால நட்பு

பால்யகால நட்பு

1 min
131

பால்யகால நட்பு

பைய பைய பல கதைகள் பேசி

வாழ்ந்திரும் நட்பது !

பால்யகால நட்பு பாசங்களை துணைக்கொண்டு பறந்து வாழ்ந்திடும் நட்பது 

பால்யகால நட்பு பகுத்துண்டு பல்லூயிர் ஓம்பிய நட்பது!

கீழ் சாதி மேல்சாதி என பேதம் பார்த்திடாத நட்பது!

அரைக்கால் சட்டையும் பாவடை சட்டையுடன் சுற்றிய நட்பது!

வஞ்சமில்லாமல் வாஞ்சையுடன் சுற்றிய நட்பது!

 இருக்கபட்டவனும் இல்லாதவனும் இன்புற்று சுற்றிய நட்பது!

இரட்டை ஜடையும் பரட்டை தலையுமாக சுற்றிய நட்பது!

மிதியடிகளின்றி மிதமிஞ்சிய நட்பின் இறுமாப்போடு சுற்றிய நட்பது!

சிறுக சிறுக சேர்த்து கூட்டாஞ்சோறு ஆக்கி தின்னு குதுகளித்த நட்பது !

வெயிலோடு வெயிலாக

விளையாடிய நட்பது !

மழையோடு விளையாடிய

ஏதும் அறியா மழலைகளின் நட்பது !

  சாதிகள் அறியா சாதித்த நட்பது !

அறிவார்ந்த கேள்விகளையும

அன்போடும் அறிவோடும்

ஆராய்ந்த்திட்ட அற்புத நட்பது !

பால்யகால நட்பது!!!


உங்களின்

🙏தினேஷ் 🙏



Rate this content
Log in

Similar tamil poem from Children