விளையாட்டுக்கு தலையாட்டு, பூவா தலையா நீ போட்டு!
விளையாட்டுக்கு தலையாட்டு, பூவா தலையா நீ போட்டு!
நான் பேசும் விளையாட்டு
அலைபேசி விளையாட்டோ,
விலைபேசும் சூதாட்ட விளையாட்டோ அல்ல!
விடமுயற்சிக்கு விருந்தளிக்கும்
அணி விளையாட்டும் தனி நபர் விளையாட்டும்!
அது சொல்லும்,
தொலை தூரமே இருந்தாலும் விட்டுவிடாதே,
தொட்டுவிடும் தூரம் தான் வெற்றி என்று!
எப்போது வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம் என்று!
இது வாழ்க்கைக்கும் பொருந்தும்!
அணியாக ஒன்றுசேர்ந்து உழைப்பதை, விளையாட்டை தவிர எவராலும் அவ்வளவு சுலபமாக கற்றுக்கொடுக்க முடியாது!
உண்மையாகவே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை,
இலக்கை அடைய இறுதிவரை போராடினால் அதிர்
ஷ்டம் கூட அணிமாறும்!
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் தான்!
எல்லோரும் வெற்றிக்கு தாகுதியானவர்களே!
வீழ்ந்தாலும் வாழ்த்துவோம் எதிரணியினரையும்!
தோல்வியே சந்தித்தாலும் துவண்டு விடாமல் உன்னை வெற்றியின் வாசலுக்கு கைபிடித்து அலைத்துசெல்லும் அன்பு நண்பன்!
அனைத்து நோய்களுக்கும் ஓய்வு கொடுக்கும் அற்புதமான மருத்துவன்!
உடல்நலத்தை மட்டும் அல்ல மனநலத்தையும் குணமாக்கும் அருமருந்து!
வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதே என சொல்வார்கள்!
யார் கண்டது அந்த விளையாட்டே கூட உன் வாழ்க்கையாகலாம்!
விளையாட்டுக்கு தலையாட்டு
பூவா தலையா நீ போட்டு!