STORYMIRROR

Muthukrishnan Annamalai

Abstract

5  

Muthukrishnan Annamalai

Abstract

கொரோனாவே போய்விடு!போய் ஓய்வெடு

கொரோனாவே போய்விடு!போய் ஓய்வெடு

1 min
398

கொரோனாவே

போய்விடு! போய் ஓய்வெடு!


உலகிற்கு உணர்த்திவிட்டாய்

இனி மூன்றாம் உலகப்போரே வேண்டாமென்று!

போய்விடு! போய் ஓய்வெடு!


மதம் இனம் மொழி

அனைத்தையும் வென்று ஒன்று சேர்த்து

கொன்றும் புதைத்துவிட்டாய், போதும்!

போய்விடு! போய் ஓய்வெடு!


இது நியாயமா? இது நியாயமா?

எங்களை வீட்டை விட்டு நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாமென்று அறிவிக்க செய்துவிட்டு,

நீ உலகம் முழுவதும் சுற்றுகிறாயே!


போய்விடு! போய் ஓய்வெடு!


காற்றில் பரவுவதில்லை என்பதில் சற்று இளைப்பாறுகிறோம்.

ஆனால், இங்கு வைரஸால் செத்தவர்கள் பாதி என்றால்,

வாட்ஸப்பால் செத்தவர்கள் மீதி!

அதில் பரவிய வதந்திகளால் வந்த பீதி அது!


சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி

ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய்,

குடும்பத்தையும் ஒன்றாக இணைத்துவிட்டாய்!

இது தொழில்புரட்சியும், தொழில்நுட்ப புரட்சியும் செய்யாத ஒன்று! போதும்!

போய்விடு! போய் ஓய்வெடு!


கோடை காலம் நெருங்கிவிட்டது

கை கழுவி கழுவி தண்ணீர் பஞ்சமே வந்துவிடும் போலிருக்கிறது!

இனி கண்ணீரால் தான் கழுவ வேண்டும்!


போய்விடு! போய் ஓய்வெடு!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract