கணினிப் பெண்ணே
கணினிப் பெண்ணே


பெண்ணை காதலிப்பதை விட
என்னை காதலி
நான் வாழ்க்கை தருகிறேன் என்றாய்!
கன்னிப் பெண்ணின்
கைகள் பிடிக்கும்
வாலிப வயதில்
கணினி பெண்ணே
உன் கரம் பிடித்தேன்
சுட்டி கொண்டு....
வரம் கொடுத்தாயோ இல்லையோ
வாழ்க்கை கொடுத்தாய்
வறுமை ஒழித்து!
நிரல் மொழி மாற்றினேன்,
கால நேரம் மாற்றினேன்
கலாசாரம் கூட மாற்றினேன்
உன்னுடன் கொஞ்சி மகிழ,
வீட்டை விட்டு மட்டுமல்ல
நாட்டை விட்டே ஓடி வந்தேன்
உன் மீது கொண்ட காதலால்....
என்னை விட்டு விலக
நீயும் நொடிக்கொருமுறை
மாற்றி கொண்டே இருக்கிறாய்
உன் ஓட்டத்தின் வேகத்தை.....
உன்னை மறக்க முடியாமல்,
தீரா காதலோடு
மேம்படுத்திக்கொண்டே இருக்கிறேன்
என்னை....
கடைசியில்
நீயும் கைவிட்டு விடாதே
காதல் தோல்வி என்று!