கவிஞனும் இன்னொரு நியூட்டன்தான்
கவிஞனும் இன்னொரு நியூட்டன்தான்


எந்தக் கவிஞனும்
இன்னொரு நியூட்டன் தான்,
அவளை காதலிக்கும் போது
நானும் கண்டேன் ஆயிரம்
புதுமைகளை அவளிடம்!
இன்னும் புரியவில்லை!
நானும் தேடிக் கொண்டு தான்
இருக்கிறேன்,
காற்றில் அவள் விழி
எழுதும் கவிதைகளுக்கு
அர்த்தங்களை!
ஆனால், காற்றும் காதலிக்க
கற்றுக் கொடுக்கிறது,
தென்றலாய் அவளை கடந்து வந்து
என்னை தொட்ட போது....
வீணையாய் மீட்டுகிறது என்னை,
அவளது நினைவுகளால்!
இரவில் நிலவின் வெளிச்சத்தில்
நட்சத்திரங்கள் ஜொலிப்பது போல!
அவளின் முகமும் பிரதிபலிக்கிறது
இருளில் அலைப்பேசியின்
குறுந்தகவலை படிக்கும் போது!!!!!