STORYMIRROR

Muthukrishnan Annamalai

Abstract

4  

Muthukrishnan Annamalai

Abstract

கொள்ளையனே வெளியேறு!

கொள்ளையனே வெளியேறு!

1 min
209

என்ன ஒரு கொடுமை!


கொலைகார கொரோனாவே,

அநியாயமாக

அனைவரின் உயிரையும்

நீ கொள்ளையடித்துவிட்டு,

எங்களை கொள்ளைக்காரர்களைப் போல முகமூடி அணிய செய்கிறாய்!


சொல் பேச்சை கேட்காமல்,

நீ அடங்காமல்

ஊர் உலகம் சுற்றியதற்கு

எங்களுக்கு ஊரடங்கா?


வரைமுறை இன்றி

நீர் எளிதாக தொற்றி

உன் உயிரை வளர்த்துக்கொள்கிறாய்!

ஆனால் அதை தடுக்க

நாங்கள் கடைபிடிக்கிறோம்

சமூக இடைவெளி!


இது நியாயமா?


விருந்தாளியாகவே இருந்தாலும்

மருந்தும் விருந்தும்

மூன்று நாட்களுக்கு தான் என்பார்கள்.

அழையாத விருந்தாளியாக வந்த நீ,

ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்?


இப்போது கை குலுக்கவும் கூடாது!

கை குலுக்குவது

எங்கள் கலாசாரமும் அல்ல,

கைகூப்பி கேட்கிறோம்!

எப்போது விடைபெறுவாய்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract