STORYMIRROR

Muthukrishnan Annamalai

Abstract

3  

Muthukrishnan Annamalai

Abstract

முரண்பாட்டில் 3ஆம் உலகப்போர்

முரண்பாட்டில் 3ஆம் உலகப்போர்

1 min
142

எனக்கு தெரியவில்லை,

உலக நலனுக்காக

வெப்ப மயமாதலுக்கு நடவடிக்கை எடுத்தார்களோ இல்லையோ என?


அன்று,

தனி மனிதருக்கு உணவில்லையேல்

ஜகத்தினை அழித்திடுவோம் என்று

எழுதினான் பாரதி!


தண்ணீருக்காக

மூன்றாம் உலக போர்

ஏற்பட்டிருந்தால் கூட ஆனந்தம் அடைந்திருப்பேன்!


ஆனால், இன்று

வர்த்தக போருக்காக,

முதலாளித்துவ

வல்லரசு நாடுகளால் விடுக்கப்பட்ட

உயிரி பயங்கரவாத தாக்குதல் தான்,

இந்த கொரோனா உயிரிழப்போ?

என்ற ஐயம் கூட எழாமல் இல்லை!


நாட்டின் பொருளாதாரம்

சரியுமோ என பயம் ஒருபக்கம் இருந்தாலும்!

நம் வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்த,

தொலைவிலிருந்தும் தொடருகிறோம் தொழில்நுட்ப பணியை!


தொலைபேசி என்றோ

அலைபேசி ஆனது!

ஆனால்,

இன்றோ வீட்டிலிருந்து பணி பார்க்கும் அனைவருக்கும்

தொல்லைபேசி ஆனது,

ஓயாமல் எந்நேரமும் வரும் அலுவலக அழைப்பால்!


பணமதிப்பிழப்பை விட

கொரோனா பாதிப்பால்

வேலை இழப்பு ஏற்பட்டால்,

தர்ணா கூட செய்ய முடியாத தருணம் இது!


இது எந்த நிலைக்கு செல்லும் என்று தெரியவில்லை!

பொருளாதார மந்த நிலைக்குச் செல்லாமல் இருந்தால் சரி!

பிறகு வீட்டிலிருந்து அல்ல,

வீட்டு வேலையை மட்டும் தான் செய்யவேண்டியது இருக்கும்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract