2020 பெற்றதும் இழந்ததும்
2020 பெற்றதும் இழந்ததும்


பெற்றது மாற்றம்! உருவத்தில் மட்டும் அல்ல உள்ளத்திலும்...... !
இழந்தது சோம்பல்! சுத்தமாய் இருந்தால் சுற்றத்தையும் காக்கலாம் என்றுணர்ந்தேன்....... !
பெற்றது நேரம்! வேலை செய்ய அல்ல எனக்காக வேலை செய்தவர்களை கவனித்து கொள்ள..... !
இழந்தது கவலை!அன்னையின் மடியில் உறங்கி, தந்தையின் தோழனாய் மாறி, தம்பி தங்கையின் துணையாக மாறிக் கவலை இழந்ததேன்....... !
பெற்றது தைரியம்! தாயத்தில் ஒவ்வொரு காய்களும் வெட்டுப்படும் போது....!
இழந்தது கோபம்! எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால்..... !
பெற்றது வாழ்க்கை! புது உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையும் நிறைந்த வாழ்க்கை..... !
இழந்தது 2020! வாழ்ந்த வாழக்கையின் பொய்யான பிம்பங்களை 2020-ல் இழந்தேன்......... !