STORYMIRROR

KANNAN NATRAJAN

Abstract Inspirational

5  

KANNAN NATRAJAN

Abstract Inspirational

உலக வாழ்க்கை அறிந்து நட!

உலக வாழ்க்கை அறிந்து நட!

1 min
558

காட்டில் உள்ள

மயில் ஒன்று

மானாக துள்ளி விளையாட

ஆசை அதிகம் கொண்டதுவே!

கடவுளிடம் மானாய்

மாறிட வரம் அதுவும்

வேண்டி நிற்க

மழை வரும்

நேரம் உதயமாக

மயில் தோகை

விரித்து நடனமாடி

மானைப்போல

ஓடியதில் இடறி விழுந்து

தோகை அனைத்தும் சிதறிடவே

உதிர்ந்த தோகைகளை

எடுத்து ஒட்ட வைக்க

பிளாஸ்டிக் சர்ஜரி

டாக்டரிடம் ஓடிச்

சென்றதுவே!

கரடி சர்ஜன் சொன்ன

கருவங்கோந்து பசை வைத்தியத்தில்

சிறகுகள் அனைத்தும்

ஒட்டியதுவே!

ஓடி மரம் தாவிய

மயில் தன்னை மறந்து

கீழே விழுந்ததுவே!

கைகொட்டி சிரித்த

பஞ்சவர்ணக்கிளியொன்று

மானாக நீ ஆட

மயிலாள் நீ உன் சிறகுகள்

இழக்க உன் அறிவீனம்தான்

காரணம் என உரைக்க

கடவுளிடம் மறுபடி

மயிலாக இருக்க

வேண்டுதல் பெற காத்திருந்ததுவே!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract