பூக்காரி
பூக்காரி
டாஸ்மாக் கடையின்
ஆளுகையில்
கணவனைப் பறிகொடுத்தவள்
அண்டை வீட்டினரின்
ஏச்சுக்கு பயந்தபடி
வெள்ளையுடையில் மயிலையில்
நவராத்திரி கடை விரிப்பு!
மல்லிகையும் ஜாதியும்
காமத்தின் அடையாளம்
என்றே பெண்ணினம்தான்
முத்திரை பதிக்க
வியாபார தந்திரத்திற்காக
வெள்ளைக் காகித மலர்களை
தலையில் சூடி
பெரியார் பொம்மையை
பூக்கடையின் வாயிலில்
பதித்தபடி மக்களின்
வருகைக்காக காத்திருப்பு!