STORYMIRROR

Uma Subramanian

Classics

5  

Uma Subramanian

Classics

மிதிவண்டியே....

மிதிவண்டியே....

1 min
34.7K


மிதிவண்டியே,

உனை தெருத்தெருவாய் அழைத்துக்கொண்டு....

உனை இயக்கும் அழகை ....

ஊருக்கெல்லாம் காட்டிக் கொண்டு....

உன்மீது அமர்ந்து......

கரங்களை பாக்கெட்டுக்குள் செருகி...

கால்களால் உனை மிதித்து....

விரும்பிய இடங்களுக்கெல்லாம்....

நண்பர்களோடு செல்லும் போது உண்டாகும் இன்பம் .....

 காற்றிலே பறக்கும் என் கேசமும்...

முகத்திலே வீசும் காற்றும்..... 

ஆஹா! என்ன சொல்ல?

காலேஜ் வயதில்....

கனிகையரைக் கண்டதுமே...

காலரைத் தூக்கிக் கொண்டு.....

கண்ட இடமெல்லாம் சுற்றிக் கொண்டு....

கானமெல்லாம் பாடிக் கொண்டு...

கலாய்த்த சுகம் அம்மம்மா!! 

 எத்தனை பைக்குகள் வந்தாலும்....

என் சைக்கிளுக்கு ஈடாகுமா?

காற்றை அடித்துக் கொண்டு....

காத தூரம் போனாலும்....

காற்றுக்கு இல்லை மாசு!

பெட்ரோலுக்கு வேண்டாம் காசு!

மெக்கானிக் தேவையில்லை!

மெக்கானிசம் ஒன்றும் புதிதில்லை! 

சர்வீசுக்கு போனதில்லை!

சர்வீஸ் சார்ஜூம் கொடுத்ததில்லை!

பெட்ரோல் தீர்ந்திடுமோ கவலையில்லை!

பெட்ரோல் பங்க் எங்கே தேடியதுமில்லை!

ஆயுத பூஜைக்கு உனை துடைத்து....

ஆயில் எல்லாம் போட்டுவிட்டு....

கலர் கலரா.... பலூனை பற்சக்கரத்தில் கட்டிவிட்டு....

உல்லாசமாய் ஒரு ரவுண்டு...

அடேங்கப்பா! வார்த்தைகள் இல்லை!

வாக்கிங் போனதில்லை!

பி.பி.சுகர் கேட்டதில்லை!

மிதிவண்டியே உன்னை எவ்வளவு மிதித்தாலும் சலிக்காமல் முன்னேறுகிறாய்! 

மிதித்தவர்களையும் முன்னேறச் செய்கிறாய்!

என்னே உனது பெருந்தன்மை! 

உடலுக்கு பயிற்சி தருகிறாய்!

காலுக்கு வலுவையூட்டுகிறாய்!

இதய ஓட்டத்தை சீராக்குகிறாய்!

சுவாசத்தை பலப்படுத்துகிறாய்!

இத்தனை நன்மைகள் கிடைத்தாலும்.....

உன்னை துறந்து விட்டு....

ஏன் உன் பயனை மறந்துவிட்டு.....

சொகுசாய் வாழ்க்கை வாழ்ந்துகிட்டு....

காற்றை மாசு படுத்திவிட்டு.....

உடலின் எடையை கூட்டி விட்டு....

பி.பி.சுகரை ஏத்திக்கிட்டு.... 

மருத்துவ மனையை தேடிக்கிட்டு....

மருந்து மாத்திரையை தின்னுகிட்டு..... 

படும் அவஸ்தையை என்ன சொல்ல?

எப்படி சொல்ல?

 🚴‍♂️🚴‍♂️🚴‍♀️🚵‍♂️🚵‍♀️


Rate this content
Log in