முழுதும் நனைந்தபின்
முழுதும் நனைந்தபின்
திரும்பிய திசையெல்லாம்
ஆங்கில வழிக் கல்விக் கூடம்!
பேசும் வார்த்தைகள் எல்லாம்
நுனி நாக்கு ஆங்கிலம் !
உடுத்தும் உடையெல்லாம்
மேற்கத்திய கலாச்சாரம்!
உண்ணும் உணவுகள் கூட
ஃபாஸ்ட் ஃபுட் !
நோய் தீர்க்கும் மருந்துகள் கூட பெயர் தெரியாத ஆங்கிலம்!
வேளாண் மருந்துகள் எல்லாமே பாரம்பரியத்தை விட்டு
நீங்கியப் பின்
புத்தாண்டு கொண்டாட்டம் மட்டும்...
ஜனவரியா? தை? சித்திரை?
முழுவதும் நனைந்த பின்
முக்காடு எதற்கு?
கொண்டாட்டத்திற்கு ஏது பாகுபாடு?
எல்லா நாளும் புது வரவே!
எல்லா நாளும் புத்தாண்டே!
வாழ்த்துவதற்கு....
நாள் ஏன்? கிழமை ஏன்?
நல்ல மனம் போதுமே!
மனம் நிறைய வாழ்த்துவோம்!
மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்!
