ஓ.... தென்றலே
ஓ.... தென்றலே
மலரின் சுகந்தத்தை சுமந்து செல்லும் தென்றலே!
என் மண்ணில் சுதந்திர வாசத்தை பரப்புவாயா?
பாகுபாட்டால் உடைந்து கிடக்கும் சமூகமிதில்
அன்பின் வாசமதை வீசுவாயா?
இளைய சமூகமிதின்
மயக்கம் தெளிவிப்பாயா?
சிதைந்து போகும் சமுதாயமிதில்
பகுத்தறிவு விதையினை தூவுவாயா?
சொல்லிச் சென்றிடு தென்றலே!
தேசம் மீது நேசம் கொள்வோம்
வீசும் காற்றும் பேசும் படி செய்வோம்!
நாளைய சமூகம் நமது கையில்!
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்!
விடியல் நம்
சமூகத்தின் விடியலாய் அமையட்டும்!