விழ விழ எழுவோம்..!!
விழ விழ எழுவோம்..!!
தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் போதும்
எத்தனை முறை விழுந்தாலும்
மீண்டும் எழுந்து விடலாம்....
விழுந்து விட்டோமே என வீழ்ந்தே கிடந்தால்
எத்தனை பேர் வந்தாலும் தூக்கிவிட முடியாது...
எத்தனையோ முறை விழுந்து அடிபட்டு
அழுது மெல்ல மெல்ல நடை பழகிய நமக்கு
வாழ்வில் ஏற்படும் மேடு பள்ளங்கள் ஒன்றும் புதிதல்லவே....
பள்ளத்தில் விழுந்தாலும் மேட்டில் இருந்து சருகினாலும்
மீண்டும் எழுவோம்... எத்தனை தடை கற்கள் வந்து விழுந்தாலும்
படிக்கற்களாய் ஆக்கிக் கொண்டு முன்ன
ோக்கி சென்று கொண்டே இருப்போம்...
எப்பொழுதுமே விழுவது தவறல்ல
நாம் எழுந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கையில்....
நம்மால் இனி முடியாது என்று வீழ்ந்தே கிடப்பது தான் தவறு
முயற்சியே செய்யாது அப்படியே கிடப்பதில்
பயன் ஏதும் இல்லையே...
முயற்சி செய்தால் தானே முன்னோக்கி செல்ல முடியும்
வெற்றியும் கிட்டும்.... வெறும் கனவு மட்டும்
வெற்றியை தந்து விடாதே.... பயிற்சியும் அத்தோடு முயற்சியும்
தன்னம்பிக்கையும் தைரியமும் தானே வெற்றியை ஈட்டி தரும்....!!!
- நித்யஶ்ரீ சரவணன்