Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Nithyasree Saravanan

Inspirational Others

5  

Nithyasree Saravanan

Inspirational Others

மாற்றத்தை விதைப்போம்

மாற்றத்தை விதைப்போம்

1 min
437


பெற்றோர் உற்றார் கைவிட 

நண்பர்களும் கிண்டல் கேலி செய்ய 

சமூகத்தின் பார்வையும் மாறிப் போக 

இழிவான சொற்கள் பல கேட்டு 

தவறிழைத்தது போல் கூனிக் குறுகி 

தன் விதி நொந்து சாகத் துணியும் 

திரு நங்கையும் நம்பியும் பலர் இருக்க  

தனக்கான அங்கீகாரம் முழுதாய் வேண்டி நிற்கும் 

அவர்களையும் ஓர் உயிராய் பார்க்கலாமே...

அன்பு கொண்ட நெஞ்சில் பாகுபாடு ஏதுமில்லையெனில் 

வெறுத்து ஒதுக்குவதும் ஏனோ ? 

பட்டப்பெயர் பல வைக்காது 

அவர்களை காணும் கண்ணோட்டத்தை மாற்றி 

அவர்களும் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து 

அவர்களது உடலை வருத்தாது உள்ளத்தை நோகடிக்காது

புது மாற்றத்தை விதைப்போம்....!!! 



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational