என் கண்ணாளனே
என் கண்ணாளனே


என் கண்ணாளனே.......!
நிழல் தேடினேன் நிஜமாய் நீ வந்தாய்
கனவிலும் நான் காணாத அன்பை
காதலோடு பரிசளித்தாய்
மறந்தே போன மகிழ்வை காணச் செய்தாய்
நாள்தோறும் புன்னகை பூக்கச் செய்தாய்...!
உன் விழி பார்வையிலேயே எனை ஈர்த்து
புன்னகைத்து உன் முத்துப் பற்களில் என்னை விழச் செய்து
பேசி பேசி என் மனம் கவர்ந்து
இதுவரை காணாத உலகை கண் முன் விரிய வைத்தாய்....!
உன் அருகாமை என்றும் வேண்டும் என உணர வைத்து
என் உயிர் நீ என கூறி அணைத்துக் கொண்டாய்
அவ்வணைப்பினால் என்னை அழவும் வைத்தாய்....!
உன் அன்பினை அள்ளிக் கொடுத்து
மனதில் காதலை பூக்க வைத்து
உயிர் வரை உணர வைத்தாய்
என் உயிரே நீ எனவும் உணர்த்திவிட்டாய்.....!!!