படிப்படியாய்....
படிப்படியாய்....


ஒவ்வொரு படியாய் நீ
ஏறிடும் மென்மையில்
படிந்திடும் என் மனது
வாழ்க்கைப் படிகளில் ஏறியே
கலைத்துப் போன
என் மனதின் கால்களுக்கு
ஓய்வு தரக்கூடியது
உன் பாதத்தின்
மெல்லிய தொடு உணர்வே
என் கால்களோடு
மென்மையாய் பேசிடும்
வெள்ளி கொலுசுகளைப் பற்றி
உனக்குத் தெரியுமா ஒரு சேதி...
சங்கமிக்கும் வேளையில்
மெதுவாக அவை பேசுகின்றன
எங்களுக்கு நீ போட்டியா என்றே?
தளர்வாய் என் மார்பினில்
நீ சாய்ந்திடும் நேரங்களில்
அவை தயங்கியே நிலம் பார்க்க
படிப் படியாய் தயக்கம் கலைந்திட
மறுபடியும் துவங்கிடும்
ஒரு காதலின் சங்கமமே!