அதீத மழையில்!
அதீத மழையில்!


சில்லன்ற சின்னஞ்சிறு மழைத்துளியாய்
என்னுள் நித்தமும் துளிர்த்திடும்
உன் மீது நான் கொண்ட
அதீத அன்பின் சாரல்
விண்ணிலிருந்து
தூறலாக துவங்கி இன்று
பெருக்கெடுத்து சாலையெங்கும்
வெள்ளமாக ஓடும் போது -
ஏனோ மழை நீரின் வாசனையில்
உன் வாசம் தெரிந்திட
தத்தளித்து தவிக்கும் என் மனது!
உணர்வுகளின் நீரோட்டத்தில்
மழை நீரின் இதம் அறிந்து
கனவுகளுடன் காத்திருக்கும்
மழைக்கால வெயிலாக நீ!