அம்மாவின் காலணிகள்!
அம்மாவின் காலணிகள்!
என் நினைவின் சுவடுகளில்
நீங்காமல் இருக்கும்
சில பதிவுகள்.
என்றோ அவை நடந்திருந்தாலும்
இன்றும் என்னுள் ஒரு வலியாக
ஏன் நீடித்து இருக்கின்றன.
என் தங்கை கொடுத்த
அம்மாவின் காலணிகள்
பாதங்களின் ஸ்பரிசத்தில்
நான் அவர்களை உணர்ந்தேன்.
காலம் உன்னிடத்திலிருந்து
என்னை விலக்கி வைத்த
வினாடிகள் நீண்ட தருணங்களாக
மாறி என் இதயத்தின் சீரற்ற
துடிப்புகளாக இன்று ஒலிக்கும்
நேரத்தில் உன் பாதம் பட்ட
அந்த காலணிகள் எனக்குள்
ஒரு உணர்வுகளாக உரு மாறி
நீ என்னை விட்டு விலகவில்லை
நான் செல்லும் வழியெங்கும்
எனது துணையாக வருகின்றாய்
நாளும் என்னை வழி நடத்துவாய்.
