சரிதானே
சரிதானே


சரி சரி என்று தலையாட்டும்
சராசரி காதலானாய்
நான் உனக்கு இருந்தால்
என் இனியவள் உனக்கு
என்ன தான் மதிப்பிருக்கும்?
ஆண்மையின் ஆளுமையில்
வருவதற்கு தயக்கம் ஏன்
அரவணைப்பின் இறுக்கத்தில்
மீண்டும் மீண்டும்
பிறக்கும் காதலின் இசையை
கேட்பதற்கு விருப்பமில்லையா
என் இனியவளுக்கு!