தடுமாறி தடுமாறி....
தடுமாறி தடுமாறி....
என் கனவுகள் தடுமாறிட
என்ன மாயம் செய்தாய் நீ
உருமாறி உருமாறி
உன் எண்ண்ங்கள் என்
கனவுகளை கலைத்தது
தூக்கம் மறந்த இரவுகளில்
தனிமையில் தவிக்கின்றேன்
இன்னும் உனக்கு இல்லை
என் மீது இரக்கம் தான்.
மனதின் உணர்வுகளும் முடங்கிட
இப்போது எனக்குத் தேவை
உன் சிரிப்பு தான்!
உன் தோளில் தலைசாய்த்து
நான் கண் மூடித் தூங்கிட
என்று நீ வருவாயோ!!!