பாவையின் பார்வையால் பாழான பாறை
பாவையின் பார்வையால் பாழான பாறை
முதல் பார்வை பதிந்தன உன்மேல்
கோபம் கொண்டேன் எந்தன் விழிமேல்
பார்க்க ஏன் தாமதம் என்றா
பார்த்த பின் ஏன் தயக்கம் என்றா
பதிலறியா வினாவானது
பார்வைக்கான வினாவும்
கைபேசி எண்ணோ என்னிடமில்லை
கைப்பாவை ஆக விருப்பமில்லை
கைதான மனமோ திரும்பவில்லை
கையறு நிலையால் காதலில்லை
நிரந்தரமான நினைவைத் தந்தாய்
நிபந்தனையான நிழலாய் வந்தாய்
நிறமில்லாத நிறைவைத் தந்தாய்
நிந்தையில்லா நின்பார்வை தந்தாய்
உன் கண்களின் மொழியை அறியவில்லை
என் கண்களும் அதனை பழகவில்லை
கண்டும் காணாமல் நீ இருப்பாய்
அறிந்தும் அறியாமல் நான் இருப்பேன்
போகாமல் பின்தொடர்வேன்
போனாலும் நினைத்திடுவேன்
போதும் வரை ரசித்திடுவேன்
போட்டியாயினும் வென்றிடுவேன்
கோபமான குணம் உனத
ு
கோரமான முகம் எனது
அடங்காத பேச்சு உனது
அந்தமான பேச்சு எனது
அறிய முடியா பார்வை உனது
அரித்ததோ எந்தன் மனது
பேரழகி என்று புகழ மாட்டேன்
பெயரைச் சொல்லி அழைக்க மாட்டேன்
தொல்லை தந்து திரிய மாட்டேன்
தொட்டு பேச பணிக்க மாட்டேன்
பேசுவதற்கு பயமில்லை
பழகுவதற்கு நேரமில்லை
பின்தொடர விருப்பமில்லை
இருப்பினும் இயலவில்லை
நின்று பேச நேரமில்லை
பேச்சை நிறுத்த தேவையில்லை
பரிந்து பேச ஆளில்லை
புரிந்து பேச நாளில்லை
பிரிந்து போக மனமில்லை
தெரிந்து கொள்ள தடையில்லை
முகத்தை பார்த்தால் மதிக்க தோன்றும்
மனதால் மட்டுமல்ல
மட்டற்ற வார்த்தையாலும்
அகத்தை அதிகம் அறிய தோன்றும்
ஆர்வத்தால் மட்டுமல்ல
அளவில்லா அக்களிப்பினாலும்