மீனென மாட்டிக் கொண்டேன்...!
மீனென மாட்டிக் கொண்டேன்...!
மை தீட்டிய அழகிய காந்தள் அவளின்
விழியில் மீனென மாட்டிக் கொண்டேன்...
உதடுகள் மொழிவதை விட அவளின் விழிகள்
ஆயிரம் கதைகள் பேசின....
காந்தத்தின் ஈர்ப்பு விசையை விட
அதிக சக்தி வாய்ந்த அவளின் பார்வையோ
கண்டதும் மனதைக் கவர்ந்து
காதல் நோயை பரப்பியது....!!
நோய் தாக்கிய நானும் மருந்தாய்
சிறு புன்னகை பூப்பாளா என அவள் பின்னே செல்ல
பார்த்தும் பார்க்காதது போல் சென்றாள்....
நான் அறியாது உதட்டில் சிறு புன்னகை பூத்தவளின்
திருட்டுத்தனம் எனக்கு தெரிந்து விட
என் உதட்டிலும் புன்னகை பூத்தது...
இருவர் உள்ளும் காதல் அழகாய் மலர்ந்தது....!!!