STORYMIRROR

Chidambranathan N

Romance Classics

5  

Chidambranathan N

Romance Classics

ஒரு தலைக் காதலியின் நினைவுகள்!

ஒரு தலைக் காதலியின் நினைவுகள்!

1 min
455

என்னவளிடம் உரையாடாமல் நான் நீண்ட தொலைவிற்குச் சென்றுவிட்டேன்!


என்னவளை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து என்னால் காண முடியாது என்னும் கவலையினால் நான் விலகிச் சென்றுவிட்டேன்!


என்னவளைப் பிரிய மனம் இல்லாமல் நான் நகர்ந்து சென்றுவிட்டேன்!


என்னவள் எதிர்காலத்தில் என்னைச் சந்திக்கும்போது என்னை மறந்து போய் இருப்பாள் என்னும் கவலையில் நான் விலகிச் சென்று விட்டேன்!


என்னவளை எதிர்காலத்தில் பார்க்கும்பொழுது இருவருக்கும் இளமைக்கால நினைவுகள் வாராது என்னும் கவலையில் நான் விலகிச் சென்று விட்டேன்!


என்னவளை என்னுடன் ஒப்பிடும்பொழுது இந்த உலகினில் வாழும் கோடிக்கணக்கான அடையாளம் தெரியாத ஒருதலைக் காதலர்களில் ஒருவராக நானும் இருக்கிறேனே! என்னும் கவலையில் நான் விலகிச் சென்று விட்டேன்!


என்னவளை என்றாவது ஒரு நாள் மறைந்து விடுவேன் என்னும் நம்பிக்கையில் வாழ்க்கையினை நகர்த்திக் கொண்டு இருக்கிறேன்!


என்னவளை நினைத்து யாருக்கும் நினைவில்லாத ஒருதலைக் காதலனின் வரிகளாக எனது ஒவ்வொரு ஆண்டின் நாட்குறிப்புகளில் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்!


என்னவளை நான் அடையாளம் இல்லாத முகநூல் கணக்குகளின் மூலம் ஏதோ ஒரு பெயரில் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்!


என்னவளின் நூற்றுக்கணக்கான முக நூல் விருப்பங்களில் எனது விருப்பமும் ஒளிந்து கொண்டு இருக்குமாறு தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்!



Rate this content
Log in

Similar tamil poem from Romance