தோற்காத முதல் காதல்
தோற்காத முதல் காதல்


காதல் என்றாலே பொய் தானா என்ன?
தேடிப்பார்த்தால் கிடைக்கும்
ஒவ்வொருவரின் டைரியிலும் தோற்றுப்போன முதல் காதலின் பதிவு....
ஆனால் யார் சொன்னது உண்மையில் முதல் காதல் தோல்வியென்று.....
நம்மை அறியாமலேயே
சுவாரஸ்யமான எல்லா விதமான காதலும் நம்மை சுற்றியே தான் அரங்கேறுகிறது......
ஆமாம்,
பிறக்கும் முன்னே
தாய் தன் குழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை!....
முதன் முதலில்
தந்தை தன் மகன் மீது வைத்த காதல் தான் முதல் ஒருதலை காதல்.....
சகோதர சகோதரிகள் தன் உடன்பிறப்புகள் மீது வைத்த பாசம் தான் சொல்லப்படாத முதல் காதல்.....
புரிந்து கொள்ளாமல் முகம் தெரியாத மூன்றாம் நபரிடமும் முகவரி தெரியாத சமூக வலை தள நண்பர்களிடம் தேடும் போது தான் தோற்றுப்போகிறது....
வாழ்க்கையில் காதல் பலவகை...
காலம் காதலை சொல்லாமல் இருந்திருக்கலாம்....
ஆனால், காதல் கொள்ளாமல் யாரும் இருக்க முடியாது.....