ஆரோக்கிய முத்தம்!
ஆரோக்கிய முத்தம்!


முத்தங்கள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
முத்த மிடும் முன்பே
அறிந்து கொள்க!
எல்லா உயிர்களிலும்
முத்தம் என்பதுண்டு
ஆறரிவும் ஐந்தறிவும்
இதில் மட்டும் ஒன்று!
மனிதரின் முத்தத்தில்
உதடே பிரதானம்
மாக்களின் முத்தத்தில்
உரசலே பிரதானம்
உதடு கன்னம்
தலை நெற்றி
மனித முத்தம்
இடம்பெறும்!
உடம்பு தலை
வாய் கொம்பு
விலங்கு உரசல்
நடைபெறும்!
காதலன் காதலிக்கு
கிறக்க முத்தம்!
கண்ணான குழந்தைக்கு
உறக்க முத்தம்!
அம்மாவின் முத்தத்தில்
அன்பைப் பார்க்கலாம்
அப்பாவின் முத்தத்தில்
பாசத்தை உணரலாம்
சிலரின் முத்தம்
சிரமத்தைக் கொடுக்கும்
சிலரின் முத்தம்
வியாதியைக் கொடுக்கும்
யாரும் யாருக்கும்
தந்திடல் நன்றன்று – முத்தம்
அன்பானவருள் மட்டும்
நிகழ்ந்திடும் ஒன்று!
குழந்தைக்கு தொடு முத்தம்
தடை செய்ய வேண்டும்
அயலார்கள் அண்டாமல்
முடை செய்ய வேண்டும்!
ஆகச் சிறந்தது
பறக்கும் முத்தம்
ஆரோக்யம் தந்திடும்
நித்தம் நித்தம்!