களம் இறங்கா கவிதைகள்…!(கவிதை)கோவை என். தீனதயாளன்
களம் இறங்கா கவிதைகள்…!(கவிதை)கோவை என். தீனதயாளன்
எண்ணற்ற இளைஞர்களுக்கு…
ஏழாம் வகுப்பு முதலே
ஏற்பட்ட எழுச்சிதான்…
பள்ளிப் பருவ
கவியரங்குகளில்
களை கட்டிய
அவரவர்
கவிதைகள் ஏராளம்!
கல்லூரி
வளாகத்தில்
வலம் வந்த
அவர்தம்
கவிதைகளோ பாராளும்!
அவர்கள்…
காதலென்றும் – சுற்றுச்
சூழலென்றும்
இமயம் முதல்
குமரி வரை
இழுத்தெழுதா
பொருள்களில்லை!
அவர்கள்…
அன்பென்றும் - நல்
அறிவென்றும்
அவையத்து
பொருள்களில்
படைக்காத
படைப்புமில்லை!
அவர்கள்…
வானமென்றும் – கீழே
பூமியென்றும்
அகம் புறம்
அனைத்தினின்றும்
புரியாத
கவிவர்ணஜாலமில்லை!
அவர்கள்…
கடவுளென்றும் – அடர்
கானகமென்றும்
கணக்கில்லா
கருப்பொருளில்
செதுக்காத
கவிச்சிலைகள் ஏதுமில்லை!
அவர்கள்..
ஆர்த்தெழுந்து
கவிதை வரிகளை
வார்த்தெழுதத்
தவறவில்லை
பார் போற்ற
தடையுமில்லை!
என்றாலும்
அவர்தம் கவிதைள்
களம் இறங்கா
கவிதைகளாய்
இருந்த போது…
‘ஸ்டோரிமிரர்’ போன்றதொரு
சொர்க்கபூமி கிடைத்ததனால்
எழுதிக் குவிக்கும்
எண்ணற்ற இளைஞர்கள்
கவிதை வானமதில்
வலம்வந்து வெற்றிபெறும்
நாளிங்கு தொலைவிலில்லை – அந்த
நாளிங்கு தொலைவிலில்லை!