STORYMIRROR

Manimaran Kathiresan

Inspirational

5  

Manimaran Kathiresan

Inspirational

ஆசானின் தாசன்

ஆசானின் தாசன்

1 min
413

அன்னை விட்டுவந்த பள்ளியில்

அகரம் தொடங்கி வைத்து


ஆசிரியர் அரவணைத்த போது

ஆரம்பக்கல்வி நெஞ்சிலே புதைத்து


இளமை யெட்டும் வரையில்

இணையற்ற கல்வியை கொடுத்து 


ஈடில்லா இளைஞனை உருவாக்கவே

ஈடுபாடோடு மறுமுனையில்தொடரும்


உங்கள் உழைப்பின் அடையாளம் 

உயரந்தவர் அனைவரின் வெகுமானம் 


ஊர்சொல்லும் பிள்ளைகள் எல்லாம்

ஊறியதும் உங்கள் கனாதானே


எண்ணெழுத்து இகழேல் சொன்னதும்

எண்ணங்களை மெய்பட வைத்ததும் 


ஏணிபோல எங்களை ஏற்றிவிட்டு

ஏணியாகவே நிலைத்து நின்றதும் 


ஐயனின் பெருமிதத்தை பேசும்

ஐயனோ கடமையெனறே கடக்கும் 


ஒழுக்கம் தழுவிய ஒருமைப்பாடு

ஒப்பற்ற கல்விக்கு ஒத்துழைப்பு


ஓய்வறியாத உங்கள் சேவையும்

ஓடிக்கொண்டே இருக்கட்டும் வழிகாட்ட 



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational