கடவுளுக்கு எம்மொழி
கடவுளுக்கு எம்மொழி


கடவுளுக்கு எம்மொழி
கடவுளே! உமக்கு
இம்மொழி தெரியதாம்? எம்மொழி தெரியுமோ!!
கடவுளே! எமக்கு
இம்மொழி எம்மொழியாம்!!
எம்மொழியும் உம்மொழியல்லவோ?
ஐந்தறிவின் மொழியெல்லம்!
ஐயமின்றி புரிந்திடுமோ!!
தாவரங்கள் மொழியெல்லாம்!
தனித்துவம்தான் பெற்றிடுமோ!!
உயிரினங்கள் எம்மொழியில்
உரைநடத்தும் உன்னிடத்தில்!!
எனக்கும்
சொல்லிவிடேன்! அம்மொழிக்காய் மாறுகிறேன்!!
உலகியல் மக்கள்தான் உன்னையும் கூறுபோட்டார்களோ!!
கூறுபோட்ட கடவுளையெல்லாம்
கூவிகூவி விற்றார்களோ!!
உனக்கான மொழியென்று உன்னதமாய் ஈட்டிவைத்தார்களோ!!
கடவுளே! இதைப்பற்றி யாரிடம்தான் கேட்பேனோ??
நான்பேசும் மொழியெல்லாம்
உனக்குத்தான் புரிகிறதா?
புரிந்தாலே போதுமே புறந்தள்ளி போவேனே!!
உனக்கென மொழியென்று உறுதிபட இல்லையே!!
>
உளமார்ந்து நினைத்தாலே உணர்ந்திடுவான் இறைவனையே
தானறிந்த கடவுளைத்தான் அவன் தாய்மொழியில் எழுதினான்
தாய்மொழியில் எழுதியதே தன்மக்கள் அறிந்திடவே
இம்மக்கள் எழுதியதெல்லாம் இறைமொழியாய் மாற்றுவதோ!!
இறைமொழி இதுவன்றோ! இயலாமை போற்றிடுவதோ!!
இறைவனின் மொழியெல்லாம்
இயற்கையின் விதியன்றோ!!
இனியொரு மொழியும் இறைவனக்கு இல்லையன்றோ
ஒருவரது உள்ளமே இறைவனின் நல்மொழியாம்
வாய்மொழி யெல்லாம் வாயடைத்தே போகட்டும்
வாய்க்கிறை யெல்லாம் தீக்கிறை யாகட்டும்
குறியீடு வரைந்தவரை! குறைபாடுகள் கண்டதில்லையே!!
குறிப்பெடுத்து எழுதியதால்! குறைகளையும் கண்டிரோ!
மொழிகள் யாதும் மொழிந்திடவே போதுமே!
மொழியாலே பாகம்பிரிக்க மொத்தமும் வீணுமே
மொழியாலே பிரித்து மொழிச்சண்டை பிடித்து
இழிவாக்காதே இறைவனை! இனமாறாத இயற்கை!!