வேசி
வேசி


வேசி எனும் பெயர் வைத்தான்,.
எவனோ,.
மறந்திட்டான்..
வேசியிடம் வருபவனின்
பெயர் வைக்க,,,
,...............
கற்பு என்று சொல்லி வைத்தான்
பெண்ணுக்கு.,
மறந்திட்டான்,.
ஆண்கற்பு என ஒன்றை சொல்ல,.
...........,,,,..
உடல் விற்பவளை வேசி என்றான்
வாங்கும் அவன்
என்ன சொல்ல.,,?
வேசி என்று புறம் கூறும்
வேடிக்கை மனிதன் இவன்..
தான் தாசி போல
நடிக்கின்றான்,,,
,.................
நீதிமன்ற கூண்டினிலே குற்றவாளி.
பழிக்கின்றான்.,,
இவன் நல்லவன் போல்,,..!
.................
அட வேடிக்கை மனிதா,,
தனி ஒருவன் குற்றம் செய்யின்
தலைகுனிவு உனக்கும்தான்...
தனிமனித குற்றமென்று ஒன்றுமில்லை
அடித்து சொல்வேன்,,
சமூக குற்றமென்றே பெயர் மாற்றம்
செய்ய சொல்வேன்..
................
குழந்தையை பொய் சொல்ல
பழக்குகிறான் பெத்தவனாய்..
பின் குழந்தை தவறு செய்தால்
கடவுளென்று சபிக்கின்றான்,.
அப்பப்பா..,
.,...............
வேடிக்கை மனிதன் இவன்...
பிறர் மேல் சாயமிட்டு
தன் நிறம் காக்கின்றான்...
தவறுகள் எப்போதும்
தனது இல்லை என்கின்றான்..
,.................
வேறுபால் இனத்தவரை
வேண்டுமென்றே பழிக்கின்றான்..
உடல்கூறு போட்டு பார்த்தால்
மிஞ்சுவதோ இரத்தம் தான்..
..................
மாடியிலே நின்றாலும்
சேரியிலே கிடந்தாலும்..
பிறந்தது கருவறையில்
மறந்திட்டான் மடமனிதன்...
வேடிக்கை மனிதன் இவன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நெற்றிக்கண் திருப்பினும் குற்றம் குற்றம்தான்..
சொல்லி வைத்தான் வீரமவன்
நக்கீரன் வீரனவன்...
தான் செய்யும் தவறுகளை
இம்மாமனிதன் ஒப்புகொண்டால்,,,
இந்த பூமி கூட தலைகீழா சுத்துமென நம்புகிறேன்...
நிச்சயமா...நிச்சயமா...
இப்படிக்கு
உங்களில் ஒருவன்..