STORYMIRROR

Logesh Kanakaraj

Abstract

4  

Logesh Kanakaraj

Abstract

இப்படிக்கு இவன்

இப்படிக்கு இவன்

1 min
81

இவன்,

அதிகாரம் மிக்கவன், ஆத்திரம் படைத்தவன்

காமம் மிக்கவன், போதை அடிமை

என்று பழிக்கபடுபவன்..

இவன்,

மென்மை இல்லாதவன்,

மேன்மக்களால் அதிகம் பாரட்டபடாதவன்..


இலக்கியத்தில் இவனுக்கு இடம் உண்டு

வீரம் எனும் தலைப்பில்,...

அன்பு அழகு இத்தலைப்புகளில்

தேடினால் கிடைக்கிறது சிலவற்றில்,,


இவன் எழுதுகிற கவிதைகளில் பெண்ணே அழகு ...

இவன் எழுதுகிற காவியத்தில் பெண்ணே தெய்வம் ,,

பெண்ணியம் பேசுவதில் இவனுக்கே முதலிடம்,,


இவன் பத்து மாதம் சுமப்பதில்லை,.

அதனால் அன்பில் இவனுக்கு இரண்டாம் இடமே...


இவன்,

பெண்ணை அவள் குடும்பத்திடம் இருந்து பிரிப்பவன்.,

அவள் கனவை கலைப்பவன்,,


இப்படி எல்லோரும் பேசலாம் இவனை பற்றி...

இவன் ஒரு ஆண்..


இவனை பற்றி இவனே பேசுகிறான்

வேறு வழியில்லை..


கருவறையில் வைத்தவளை மார்பிலே சாய்க்கிறேன்,,

தோளிலே சாய்பவள்.. முகம் சுழிக்கிறாள்,,


அழைக்கிறேன் கைபேசியில்

அம்மாவை அப்பாவை,,

"எதற்கு நீ அழைக்கிறாய் "

என்ன இது கேள்வி..


பிரியமுடன் என் பிள்ளை

தாத்தா பாட்டியிடம் ஒரு நாள்...

கதறுகிறான் என் பிள்ளை

வசைமொழியால் மறுநாள்..


உடல் நலக்குறைவில் அம்மா.

தனியாக போனால் ஊர் என்ன பேசும்,,


"ஊருக்கு வருகிறேன்" சொன்னார் அப்பா.

சந்தோசம் எனக்கு,.

மறுநொடியில் சொன்னேன்...

வேறுவேலை என்று,,,


"எப்படி இருக்கிறாய்" என்று தாய் கேட்க

"நன்றாக இருக்கிறேன்" சட்டென்று சொன்னேன்..

பொய் சொல்ல பழகினேன் என் தாயிடம் அன்று,,,


சுயத்தினை இழந்தே..

கனவுகளை தொலைத்தே,,

இல்லறம் நடத்துகிறேன்..

இல்லறம் நடத்துகிறேன்..


இப்படிக்கு

இவன்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract